பெயர் வந்தது எப்படி?
ஆப்பிள் கம்ப்யூட்டர் !
ஆப்பிள் கம்ப்யூட்டரை கேள்விபட்டிருப்பீர்கள் அதன் பெயர் காரணத்தை இது வரை ஏன் என்று
சிந்தித்தது உண்டா?
சிந்தித்தது உண்டா?
ஆப்பிள் நிறுவனத்தை தோற்றுவித்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இவருக்கு பிடித்த பழம் ஆப்பிள்தான். அவர் தன் நிறுவனத்துக்கு பெயர் சூட்ட தாமதித்துவிட்டார். இவர் தன் நிறுவன ஊழியர்களிடம் நீங்கள் எவரும் சிறந்த பெயர் வைக்காவிட்டால் ஆப்பிள் என்றே வைத்துவிடுவேன் என்று கூறினார் பின்பு
அதே நிலைத்துவிட்டது.
அதே நிலைத்துவிட்டது.
கூகிள் !
இது முதன் முதலாக கூகால் என்று அழைக்கப்பட்டது. கூகால் என்றால் ஒன்றின் பின்னால் நூறு சைபர் போட்டால் எத்தனை வருமோ அதுதான். இந்த நிறுவனத்தை தோற்றுவித்தவர்கள் செர்கீபிரின் மற்றும் லாரிபேஜ் இவர்கள் தங்கள் ப்ராஜெக்டை ஒருவரிடம் சமர்பித்தனர்.
அவர்களுக்கு அனுப்பட்ட காசோலையில் கூகிள் என்று எழுதப்பட்டிருந்தது. இன்று இந்தப் பெயரே நிறுவனத்தின் பெயராக மாறி புகழ் பெற்றுவிட்டது.
ஹாட்மெயில் !
இதைத் தோற்றுவித்தவர் ஜாக் ஸ்மித் உலகத்தில் கம்ப்யூட்டர் எங்கிருந்தாலும், வெப்மூலம் இமெயிலை அணுக ஒரு வழி வேண்டும் என்ற ஐடியா இவருக்கு தோன்றியது.
இதனிடையே சபீர் பாடியா என்பவர் தனது பிசினஸ் பிளானுக்கு, அதாவது மெயில் சர்வீசுக்கு, பெயர்தேடிக் கொண்டிருந்தார். அந்தப் பெயர் மெயில் என்று முடிய வேண்டும் என விருப்பப்பட்டார். கடைசியில் ஹாட்மெயில் என்று தேர்ந்தெடுத்தார். அந்த சொல்லில் எச்டிஎம்எல் என்ற எழுத்துக்கள் உள்ளன.
இன்டெல் !
பாப் நாய்சுக்கும், கார் டான்மூருக்கும் தங்கள் நிறுவனத்தின் பெயர் மூர்நாய்ஸ் என்று இருக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் அந்த பெயர் எற்கனவே ஒரு ஹோட்டல்செயின் மூலம் டிரேட் மார்க் செய்யப்பட்டு விட்டது.
ஆகவே வேறு பெயர் தேட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. எனவே இண்டகிரேட்டடு எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரை சுருக்கியதில் இன்டெல் என்ற பெயர் கிடைத்தது.
மைக்ரோசாப்ட் !
மைக்ரோசாப்ட் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தவர் பில்கேட்ஸ் தான். இந்த நிறுவனம் மைக்ரோ கம்ப்யூட்டர்களுக்கான
சாப்ட்வேர் தயாரிப்பதால் இந்தப் பெயர் பொருத்தமாக இருந்தது. முதன் முதலில் மைக்ரோசாப்ட் என்று நடுவில் கோட்டுடன் எழுதப்பட்டது பின்பு இது மறைந்துவிட்டது.
சாப்ட்வேர் தயாரிப்பதால் இந்தப் பெயர் பொருத்தமாக இருந்தது. முதன் முதலில் மைக்ரோசாப்ட் என்று நடுவில் கோட்டுடன் எழுதப்பட்டது பின்பு இது மறைந்துவிட்டது.
மோட்டோரோலா !
இந்த நிறுவனத்தை தோற்றுவித்தவர் பால்கால்வின். அவர்கள் நிறுவனம் முதலில் கார்களுக்கு தேவைப்படும் ரேடியோக்கள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தது. பிறகு தான் செல்போன் தயாரிப்பில் ஈடுபட்டது.
சோனி !
இது லத்தீன் மொழியிலிருந்து எடுக்கப்பட்ட சொல். சோனஸ் என்றால் ஓசை என்று பொருள். சோன்னி என்பது அமெரிக்கர்கள் பயன்படுத்தும் ஸ்லாங்.
No comments:
Post a Comment