March 13, 2014

பா.ஜ. கூட்டணி உத்தேச பட்டியல்: தேமுதிக-14, பாமக-8, மதிமுக-6, பா.ஜ.-9

சென்னை: தமிழக பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு, மொத்தமுள்ள 39 தொகுதிகளில் தே.மு.தி.க.வுக்கு 14 இடங்களும், பா,ம.க.வுக்கு 8 இடங்களும், ம.தி.மு.க.வுக்கு 6 இடங்களும், பா.ஜனதாவுக்கு 9 இடங்களும் மற்றும் உதிரிகட்சிகளுக்கு 2  இடங்களும் தொகுதி பங்கீட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ம.க. கேட்ட சில இடங்களை தே.மு.தி.க.வும் கேட்டதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வந்த நிலையில், தற்போது தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு, உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓரிரு தொகுதிகளுக்கு மட்டும் கடைசிக்கட்ட பேச்சுவார்த்தைகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.
விரைவில் தொகுதி பங்கீடு  தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது  ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின்  உத்தேச பட்டியல் வருமாறு:
                                                                                                                                      
தே.மு.தி.க  

1. திருவள்ளூர்
2. வட சென்னை
3. வேலூர்
4. ஆரணி
5. கள்ளக்குறிச்சி
6. விழுப்புரம்
7. சேலம்
8. திருப்பூர்
9. கரூர்
10. திருச்சி
11. தஞ்சாவூர்
12. சிதம்பரம்
13. மதுரை
14 நெல்லை

பா.ஜ.க

1. தென் சென்னை
2. ஸ்ரீபெரும்புதூர்
3. நீலகிரி
4. கோயமுத்தூர்
5. மயிலாடுதுறை
6. சிவகங்கை
7. ராமநாதபுரம்
8. தென்காசி
9. கன்னியாகுமரி

பா.ம.க.


1. அரக்கோணம்
2. தருமபுரி
3. கிருஷ்ணகிரி
4. திருவண்ணாமலை
5. நாமக்கல்
6. கடலூர்
7. நாகப்பட்டினம்
8. திண்டுக்கல்

ம.தி.மு.க.


1. மத்திய சென்னை
2. காஞ்சிபுரம்
3. ஈரோடு
4. தேனி
5. விருதுநகர்
6. தூத்துக்குடி

ஐ.ஜே.கே

1. பெரம்பலூர்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி


1. பொள்ளாச்சி
 

No comments: