August 31, 2016

ஒருநாள் நான் வேலைநிமித்தமாக வெகுதூரம்

ஒருநாள்  நான் வேலைநிமித்தமாக வெகுதூரம் இருசக்கர வாகனத்தில் பயணம் சென்றுவிட்டு வீடு திரும்பினேன். களைப்பின் காரணமாக தலைவலி ஏற்பட்டது. உடனே என் மகனை அழைத்து அருகில் உள்ள மருந்து கடையில் தலைவலிக்கு மாத்திரை வாங்கி வர சொன்னேன்.
மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் தலை சுற்று, வாந்தி ஏற்பட்டது, வீட்டில் உள்ள அனைவரும் பதறிப்போயினர்.என்னை அவசரமாக  மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். நான் மருத்துவரிடம் நடந்ததை எடுத்து கூறினேன். அவர்  நான் தலை வலிக்கு சாப்பிட்ட மாத்திரை அட்டையை வாங்கி பார்த்துவிட்டு இது தலைவலி மாத்திரையே அல்ல இது சிறுநீரகம் பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிடும் மாத்திரை என்றார். ஒருகணம் எல்லோரும் அதிர்ந்துபோனாம்.
பிறகு என் மகனிடம் விசாரித்ததில் மருந்து கடைக்காரர் அலைபேசியில் உரையாடிக்கொண்டே மெத்தனப்போக்கில் வியாபாரம் செய்ததுதான் இதற்க்கு காரணம் என்பது புரிந்த்தது.மக்கள் உங்கள் மீது உள்ள நம்பிக்கையில்தான் மருந்து கடைக்கு வருகிறார்கள். நீங்கள் மிகவும்  பொறுப்புணர்வோடு இருக்கவேண்டும். தயவுசெய்து அனுபவம் உள்ளவர்களை பணியில் அமர்த்துங்கள். இது போன்ற தவறுகள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். நாமும் மருத்த்வரை அணுகி மருந்து வாங்கி சாப்பிடுவது நலம். அவசரத்தேவைக்காக  மருந்து கடைகளில் மாத்திரை வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டால் நீங்கள் வாங்கும் மருந்து சரியானதா,காலாவதி ஆகாமல் உள்ளதா என்று ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து வாங்குங்கள். ஏனெனில் இது உயிர் சமப்பந்தப்பட்டது.
                                                                                                                                       #PRS 

செல்வந்தனும் அவன் நாயும்

ஒரு ஊரில் செல்வந்தன் ஒருவன் இருந்தான் அவன் செல்லமாக ஒரு நாயை வளர்த்தான். நாயும் அவனிடம் மிகவும் பரிவுடன் இருந்தது.அந்த நாய்க்கு தெருவில் உள்ள ஒரு நாயோடு நடப்பு ஏற்பட்டது. ஆனால்  செல்வந்தன் வீட்டு நாயால் வெளியே சென்று தெரு நாயுடன் விளையாட முடியவில்லை. அதனால் செல்வந்தன் வீட்டு நாயும் சோகமாக இருந்தது. தெருநாய்க்கும் ஒருநாள் கூட தன் நண்பனுடன் சந்தோஷமாக விளையாட முடியவில்லையே என்ற வருத்தம்.
இதை கவனித்த அந்த செல்வந்தன் தன் நாயிடம் உனக்கு தேவையான எல்லாமே நான் செய்கிறேன். ஆனால் நீயோ அந்த தெரு நாயிடம் விளையாட ஆசைப்படுகிறாயே! அதில் என்ன உனக்கு சந்தோசம் கிடைக்க போகிறது என்றான். அதை கேட்ட அந்த நாய் அவனிடம் நீங்களும்தான் பெரிய வீடு,வாகனம்,செல்வம்,பதவி என்று எல்லாம் வைத்துளீர்கள் பிறகு ஏன் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று கேட்டது.
அதை கேட்ட செல்வந்தன் அதிர்ந்து போனான். மகிழ்ச்சி என்பது நமக்கு பிடித்ததை செய்வதிலும், நமக்கு பிடித்தவர்களுடனும், நம்மை பிடித்தவர்களுடனும் இருந்தால் மட்டுமே கிடைக்கும்.