August 17, 2014

ஏ.டி.எம் இல் பணம் எடுக்க சென்றிருந்தேன்.நான் உள்ளே நுழையும்போது
வெளியே ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.(பாதுகாவலர் அல்ல).
நான் ஏ.டி.எம் இல் கார்டை நுழைத்து பணம் எடுக்க முயன்றேன்,உள்ளே பணம் இல்லை என்று வந்தது.உடனே கார்டை எடுத்துவிட்டு வெளியில் வந்தேன்.வெளியில் நின்ற நபரை பார்த்து இவருக்கும் பணம் வரவில்லைபோல? என்று மனதில் நினைப்பதற்க்குள்,அவர் என்னிடம் தம்பி கார்டு வெளில வந்துருச்சா? என்று கேட்டார்.நான் சற்று குழப்பத்துடன் ஆம் என்றேன்.உடனே அவர் உங்களுக்கு முன்பு நான்தான் சென்றேன்.என்னுடைய ஏ.டி.எம் கார்டு உள்ளே மாட்டிக்கொண்டது.அதனால்தான் கேட்டேன் என்றார்.
எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது.அன்றைக்கு இருந்த அவசர நிலையில் ஏ.டி.எம் கார்டு உள்ளே மாட்டியிருந்தால் நிலைமை பரிதாபமாகிருக்கும்.
(அன்றைக்கு எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்ட்டம் இருந்திருக்கும்போல)
ம்ம்ம்ம்.இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

No comments: