July 11, 2013

  • சூழ்நிலையால் சோதனை வருகிறது.

    சோதனையால், தவறு நடக்கிறது.

    தவறு நடப்பதால், வேதனை வருகிறது.

    வேதனை வருவதால், போதனை கிடைக்கிறது.

    போதனையால், மனம் தெளிவாகிறது.

    மனம் தெளிவடைவதால், வாழ்வின் அர்த்தம் புரிகிறது.

    வாழ்வின் அர்த்தம் புரிவதால், மனம் பக்குவம்

    பெறுகிறது.(idhu puriyaama naatla nirayaper sutturanunga).

பத்து ரூபாய்க்கு மண்பானை வாங்கி அதுல அதிகபட்சம இரண்டு

நாட்களுக்கு தண்ணி வைக்குறாங்க.அதுக்கு இவுங்க பண்ற அலப்பரை

இருக்குதே!10,000 ரூபாய்க்கு விளம்பரம் பண்றாங்க.

( கலி முத்திடிச்சு )
என் வாழ்வில் நிறைய மனிதர்களை பார்த்துவிட்டேன்.

ஆனால் அதில் சிலபேர் மட்டுமே மனிதர்கள்.
நம்முடைய தேவைக்காக வாழும்போது மனிதனாக

பார்க்கப்படுகிறோம்.பிறருக்காக வாழும்போது

கடவுளாக போற்றப்படுகிறோம்.
இந்த உலகில் வாழ்வது மூன்றே மனிதர்கள்தான்.

1. கெட்டவர்கள்.

2.நல்லவர்களை போன்று நடித்து வாழும் கெட்டவர்கள்

3.நல்லவர்களாக வாழ முயற்ச்சி செய்யும் கெட்டவர்கள்.

இனி வங்கிகளில் கோல்ட் லோன் கிடையாது - ஏழைகளின் அடிமடியில் கைவைத்த ரிசர்வ் பேங்க்

கிராமங்களில் ஆத்திர அவசரத்துக்கு வங்கிகளில் காதில் கைகளில் இருக்கும் நகைகளை வங்கியில் அடகுவைத்து கடன் பெறுவார்கள், விவாசயம் முதல் வீட்டு விசேஷம், எதிர்பாராத மருத்துவ செலவுகளுக்கு கிராம மக்கள் இந்த வங்கிகளின் கடனையே நம்பி இருந்தனர், தனியார் அடகு கடைகளை விட குறைந்த வட்டி என்பதும் நம்பிக்கையானது என்பதாலும் ஏழை மக்கள் இதை நம்பினார்கள்.

சரிந்துவரும் இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்துகிறேன் என்று கூறி கிராமப்புற வங்கிகள் இனி, தங்க ஆபரணங்கள் மற்றும் நாணயங்களைப் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாக கடன் அளிக்கக்கூடாது என்று ஆர்பிஐ, கிராமப்புற வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது. இது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.

பணமுதலைகள் ஒளித்துவைத்துள்ள கருப்பு பணத்தை பிடியுங்கள், பெரும் பணக்காரர்களிடம் கடனை வசூலியுங்கள், பணக்காரர்களின் வரி பாக்கியை வசூலித்து ரூபாயின் மதிப்பை உயர்த்துங்கள், இது போன்று ஏழைகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்.
மக்களுடைய துன்பத்தை தன்னுடைய துன்பமாக நினைத்து

தீர்ப்பவந்தான் உண்மையான அரசியல்வாதி.