இத்திருக்கோயில் பாண்டிய மன்னர்களில் ஒருவரால் கட்டப்பட்டது. இங்கு மூலவர் பேருக்கு ஏற்றாற்போல் வரம் தரும் குணம் கொண்டவர். வரகுண பாண்டீஸ்வரர். இக்கோவில் பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்தது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே பள்ளக்குறிச்சி என்ற கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. திருமண தடை நீங்க மிகவும் சக்திவாய்ந்த திருத்தலம். அனைவரும் வந்து வணங்கி வரகுண பாண்டீஸ்வரர் அருள் பெறுங்கள். மாற்றம் நிச்சயம் நிகழும். நிறைய திருப்பணிகள் செய்ய வேண்டி உள்ளது. கோவில் திருப்பணிக்கு பக்தர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கோவில் திருப்பணிகளை அறநிலையத்துறையும், பள்ளக்குறிச்சி கிராம மக்களும் நல்ல முறையில் கவனித்து வருகிறார்கள். நடைதிறப்பு நேரம் காலை 7 to 10. மாலை 4 to 7. நன்றி! வருக..
No comments:
Post a Comment