June 6, 2015

இதுதான் வாழ்க்கைன்னு எப்ப தெரிஞ்சுதோ

சிறு வயதில் தீபாவளி என்றால் பட்டாசுதான் நினைவுக்கு வரும்.
அப்பா தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாகவே பட்டாசு வாங்கி தந்துவிடுவார்.அதுவரைக்கும் வேகமாக சென்ற நாட்கள் அந்த
ஒருநாள் மட்டும் மெதுவாக செல்வதுபோல தெரியும்.ஒரு நாளைக்கு பத்து முறையாவது பட்டாசு பெட்டியை திறந்து பார்த்து வைத்து விடுவோம்.தீபாவளிக்கு ஒருநாள் முன்பு தூக்கம் கூட வராது.
எப்போ விடியும் என்று ஏங்கி கிடப்போம்.அதெல்லாம் ஒரு வயசு வரைக்கும்தான்.இதுதான் வாழ்க்கைன்னு எப்ப தெரிஞ்சுதோ அப்ப போச்சு அந்த சந்தோஷம்...........!!!!

No comments: