July 18, 2014

velai illa pattathari review

இரண்டு மணி 15 நிமிட  நேரம் படம் என்றால் நம்ப முடியவில்லை.
அரை மணிநேரம் படம் பார்த்த மாதிரிதான் இருந்தது.
இயக்குனர் வேல்ராஜ் அவர்களுக்கு இது முதல் படம்.அப்படின்னு சொல்லதான் முடியும்.ஆனால் இது அவருக்கும் 25வது படம் மாதிரிதான் இருக்குது.வாழ்த்துக்கள் சார்.அப்புறம் நம்ம தலைவர் தனுஷ்! நாங்கள் எப்படி அவரை பார்க்க விரும்பினோமோ அப்படியே அமைந்துக்ள்ளது அவருடைய 25வது படம்.திரையரங்கு உள்ளே செல்லும்போதே மனது பக்கு பக்கு என்று அடித்துகொள்கிறது.படம் வெற்றி என்று தெரிந்தவுடன் நாங்கள் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.தலைவர் தனுஷ் முகபாவனைகள் அனைத்தும் அட்டகாசம்.இனி அவருக்கு நகைச்சுவைக்குனு தனி ஆள் தேவை படாதுபோல.ஒவ்வொரு சீன்ளையும் நம் மனதில் நிற்க்கிறார் தனுஷ்.
எதிர்பார்ப்போடு உள்ளே சென்று எதிர்பார்த்ததைவிடவும் மிக மகிழ்ச்சியாக வெளியே வந்தோம்.விவேக் சார் கொஞ்ச சீன் வந்தாலும் கலகளப்பூட்டி மனதில் நிற்க்கிறார்.அமலபால் அழகா இருக்காங்க அது மட்டும் இல்ல அவங்க வேலைய நல்லவே செஞ்சிருக்காங்க.சரண்யா மேடம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை.நம்முடைய அம்மாக்களை நினைவுபடுத்துகிறார்.அம்மா அம்மா பாட்டு எல்லா அம்மாக்களுக்கும் சமர்பிக்கலாம்.அந்த பாடல் காட்சியில் கண்ணீர் வருகிறது விழியோரம்.சமுத்திரக்கனி சார் தாறு மாறு.இந்த நடிப்பை அவரிடம் இருந்து நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.எதார்த்தம்,ஒரு காட்சியில் அவரோடு சேர்த்து நம்மையும் அழவைக்கிறார்.அனிருத் மியூசிக் சொல்லி அடிக்குது கில்லி மாதிரி.வழக்கம்போல தனது திறமையை நிருபித்திருக்கிறார் அனிருத்.மற்ற எல்லோரும் அவர்கள் வேலை சரியாக செய்திருக்கிறார்கள்.நல்ல போலுதுபோக்கோடா இந்த காலகட்டத்துக்கு தேவையான கருத்தும் இருக்கு.ரொம்ப நாள் கழித்து தனுஷ் ரசிகர்களாகிய நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.மொத்த
கூட்டணிக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

No comments: